அமேசான் காடுகளில் 100க்கும் மேற்பட்ட டொல்பின்கள் இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் மிகப்பெரிய வனப்பகுதியான அமேசான் மழைக்காடுகளில் வெப்பநிலையானது அதிகரித்து வருவதாக உலக காலநிலை ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் பிரேசிலில் பரவியுள்ள அமேசான் சமவெளியில் சராசரியாக 20 முதல் 25 டிகிரி வரை காணப்படும் வெப்பநிலை தற்பொழுது 100 முதல் 102 பாரன்ஹீட் வரை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை மாற்றம்
இதன் போது வெப்பநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் அமேசான் நதியில் வாழும் டொல்பின்களின் மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏரியில் கரையொதுங்கும் டொல்பின்களின் இறந்த உடல்கள் தொடர்பாக விசாரணை நடத்த பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் எஞ்சியுள்ள டொல்பின்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.