கோவிட் வைரஸுக்கு எதிரான தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர்கள் கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோரே இந்த பரிசைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கோவிட் தொற்றுநோய் காலப்பகுதியில் குறித்த தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்ட போதும் தற்பொழுது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை கோவிட் -19 பரவலில் இருந்து பாதுகாக்க இந்த தொழிநுட்பம் வழி செய்துள்ளது.
நோபல் பரிசு குழு
இதேநேரம் எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் உள்ளிட்ட பிற நோய்களுக்கு எதிராக செயற்படுமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னோடியில்லாத ஒரு விடயத்தை ஆராய்ந்து குறித்த தொழிநுட்பத்தை கண்டறிந்து இந்த நவீன காலத்தில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக காணப்பட்ட விடயத்துக்கு பரிசு பெற்றவர்கள் பங்களித்துள்ளனர் என நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.