விழாவில் பேசிய ஷாருக்கான், “நான் மும்பைக்கு வந்த போது எனக்கு தாயும் இல்லை. தந்தையும் இல்லை. இருந்த ஒரு சகோதரிக்கும் உடல்நிலை சரியில்லை. அப்போது எனக்கு என்று ஒரு குடும்பமும் இல்லை. ஆனால் இந்திய சினிமா உலகம் என்னை தத்து எடுத்து இருகரங்களாலும் அணைத்துக் கொண்டது.
ஆனால் இன்று நான் நூறு கோடிக்கும் அதிகமான மக்களை கொண்ட குடும்பத்தை பெற்றிருக்கிறேன். இதற்காக அனைவருக்கும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். இந்த இரவு என் வாழ்வில் மிக முக்கியமான தருணம். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள். என்னைப்பற்றி பேசினார்கள். என்னைப்பற்றிய குறும்படம் காட்டினார்கள்.
நான் வாழ்க்கையில் சந்தித்த எல்லோரும் என்னிடம் காட்டிய அன்பு, அக்கறை, பரிவு, ஊக்கம் அனைத்தும் இல்லையென்றால் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்க முடியாது. இது என் வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்தது. ஆனால் நடிகை ரேகா எனது கையில் ராக்கி கட்டியது வருத்தம் அளிக்கிறது. என் இளமை காலத்தில் ஜெயப்பிரதா என்னை ஈர்த்திருக்கிறர். அவரை நினைத்து வண்ண கனவுகள் கண்டிக்கிறேன். ஆனால், அதை அவரிடம் சொல்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது” என்றார் நகைச்சுவையாக.
விழாவில் ஜெயப்பிரதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.