ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரின் சர்வதேச தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது.
இன்னும், சில தினங்களில் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐ.சி.சி. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆறு முறை இந்திய அணிக்காக, விளையாடி உள்ள சச்சின் டெண்டுல்கர், 2023 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஆண்கள் உலகக் கோப்பையுடன் நடந்து வரவுள்ளார் என ஐ.சி.சி. கூறியுள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடர்
இந்நிலையில், சர்வதேச தூதராக அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்,
“1987ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டிற்காக ஆறு முறை உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருக்கிறேன்.
என் மனதில் உலகக் கோப்பைகளுக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு.
எனது கிரிக்கெட் பயணத்தில் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது தான் மிகவும் பெருமை மிக்க தருணம்.
பல்வேறு விசேட அணிகள், தலைசிறந்த வீரர்கள் ஐ.சி.சி. ஆண்கள் உலகக் கோப்பை 2023 தொடரில் கடுமையான போட்டியை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.
இதற்கமைய இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.