உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை எனவும் எதிர்காலத்தில் உக்ரைனிய வீரர்களுக்கு அவர்களது நாட்டில் பிரித்தானிய வீரர்கள் பயிற்சி அளிக்கலாம் எனவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு செல்லும் பிரித்தானிய வீரர்கள் உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் எத்தகைய போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கான அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து 20 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் சமீபத்தில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்த கருத்தில், உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பிரித்தானியா வீரர்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படலாம் என தெரிவித்திருந்தார்.
உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி
இதற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், பிரித்தானிய வீரர்கள் குறிவைத்து தாக்கப்படுவார்கள் அதற்கான உரிமை ரஷ்யாவிற்கு உள்ளது என எச்சரித்தது.
இந்நிலையில் கட்சியின் ஆண்டு கூட்டத்தொடரில் செய்தியாளர்களை சந்தித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், பிரித்தானிய வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பு திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சரின் கூற்று என்றாவது நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மட்டும் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார்.
அத்துடன் எதிர்காலத்தில் உக்ரைனிய வீரர்களுக்கு அவர்களது நாட்டில் பிரித்தானிய வீரர்கள் பயிற்சி அளிக்கலாம் என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.