Loading...
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட 3 மாத சேவை நீடிப்பு இம்மாதம் 9ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சி.டி.விக்ரமரத்ன,மார்ச் 25 ஆம் திகதி ஓய்வுபெறவிருந்த போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முதல் தடவையாக அவருக்கு 3 மாத கால நீடிப்பு வழங்கியிருந்தார்.
Loading...
பின்னர் முதல் சேவை நீடிப்பு நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஜூன் 09-ம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு இரண்டாவது சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...