அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா மற்றும் அவருடைய மனைவி மிச்செல் ஆகிய இருவர் எழுத உள்ள இரண்டு புத்தகங்களை ரூ.1,000 கோடிக்கு மேல் விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதிகளின் வரலாற்றில் பதவியை இழந்த பின்னர் தங்களுடைய சொந்த அனுபவங்களை புத்தகங்களாக எழுதி வெளியிடுவது வழக்கம்.
இந்த வரிசையில் முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன் எழுதிய My Life என்ற புத்தகத்தின் விற்பனை உரிமையை 15 மில்லியன் டொலருக்கு அளித்தார்.
ஜோர்ஜ் டபள்யூ புஷ் எழுதிய Decision Points என்ற புத்தகத்திற்கு அவர் 10 மில்லியன் டொலரை வருமானமாக பெற்றார்.
இந்த வரிசையில், ஒபாமா மற்றும் அவரது மனைவியான மிச்செல் ஆகிய இருவரும் சேர்ந்து இரண்டு புத்தகங்களை எழுத உள்ளனர்.
இந்த இரண்டு புத்தகங்களை உலகம் முழுவதும் விற்பனை செய்யும் உரிமையை Penguin Random House என்ற நிறுவனம் பெற்றுள்ளது.
தற்போது வரை இந்த இரண்டு புத்தகங்களின் விற்பனை உரிமையை பெறுவதற்காக ஒபாமா மற்றும் மீச்செலுக்கு 60 மில்லியன் டொலருக்கும்(906,78,00,000 இலங்கை ரூபாய்) அதிகமான தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், இருவரும் எழுத உள்ள புத்தகங்களின் தலைப்புகள் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, Dreams From My Father மற்றும் The Audacity of Hope ஆகிய இரண்டு புத்தகங்களை ஒபாமா எழுதி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.