அரகலயா அல்லது மக்கள் போராட்டமே நாட்டில் வரிகள், மின்சாரக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு வழி வகுத்ததற்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்காமை, வரிகளை அதிகரிக்காமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை அணுகாமை என்பவற்றுக்காக அவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தினார்.
எரிபொருள் விலை
அத்துடன் அரகலைய காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரகலய போராட்டத்தினால், கோட்டாபய ராஜபக்ச தப்பிச் செல்ல நிர்ப்பந்திக்கவில்லை என்றால், வரி அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு போன்றவற்றை நாட்டு மக்கள் சுமந்திருக்கமாட்டார்கள்.
எனினும் வரியைக் குறைத்து, மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து, எரிபொருள் விலையை குறைத்த தலைவரை விரட்டிய பின்னர், வந்தவரால் விலை அதிகரிப்பை மேற்கொள்வதை விட வேறு என்ன செய்ய முடியும் என்று நாமல் ராஜபக்ச செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாமல் ராஜபக்ச இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனும், பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவின் அண்ணன் மகனும் ஆவார்.