2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நோர்வே எழுத்தாளர் ஜான் போஸிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு
இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், இலக்கிய துறைக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நோர்வே எழுத்தாளர் ஜான் போஸிற்கு வழங்கப்படவுள்ளது.
மேலும், கவிதை, சிறுகதைகள், குழந்தை இலக்கியம், கட்டுரைகள், நாடக வசனம் என பன்முக இலக்கிய தன்மை வாய்ந்தவர் ஜான் போஸ் என்பது குறிப்பிடத்தக்கது.