2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று (05) நாடாளுமன்றத்தில் சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தினால் சமர்ப்பிக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கான 3இலட்சத்து 86084 கோடியே 6788000 ரூபா ஒதுக்கீட்டில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்காக மொத்தமாக 56445 கோடியே 8500000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிபருக்கான செலவீனம்
2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளில் அதிபருக்கான செலவீனம் மற்றும் அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளுக்கென மொத்தமாக 123711 கோடியே 6115000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதமரின் செலவீனம் மற்றும் அவரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கென 88726 கோடியே 5000000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிபருக்கான செலவீனமாக 660 கோடியே 1150000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் செலவீனத்துக்காக 115 கோடியே 5000000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 88611 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் வடக்கு மாகாணத்திற்கு 451 கோடியே 5000000 ரூபாவும் கிழக்கு மாகாணத்திற்கு 522 கோடியே 5000000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கான 3இலட்சத்து 86084 கோடியே 6788000 ரூபா ஒதுக்கீட்டில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகளாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்காக 1060 கோடி ரூபாவும் இதில் பௌத்தமதத்திற்காக 166 கோடி ரூபாவும் இந்து மதத்திற்காக 28 கோடியே 30 இலட்சம் ரூபாவும் கிறிஸ்தவ மதத்திற்காக 21 கோடி ரூபாவும் இஸ்லாம் மதத்திற்காக 18 கோடி ரூபாவும் மிகுதி ஏனைய திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு, மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சுக்காக 72343 கோடியே 1495000 ரூபாவும் பாதுகாப்பது அமைச்சுக்காக 42372 கோடியே 5000000ரூபாவும் வெகுசன ஊடக அமைச்சுக்காக 255 கோடி ரூபாவும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்காக 412 கோடியே 51000000 ரூபாவும் சுகாதார அமைச்சுக்காக 41028 கோடியே 9998000 ரூபாவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்காக 1961 கோடியே 2025000 ரூபாவும் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுக்காக 231கோடியே 9000000 ரூபாவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்காக 4036 கோடியே 84000000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கமத்தொழில் அமைச்சுக்காக 10042 கோடியே 3280000 ரூபாவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்காக 4298 கோடியே 3000000 ரூபாவும் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சுக்காக 1917 கோடியே 4730000 ரூபாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்காக 4245 கோடி ரூபாவும் கல்வி அமைச்சுக்காக 23705 கோடி ரூபாவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்காக 1000 கோடி ரூபாவும் கைத்தொழில் அமைச்சுக்காக 910 கோடியே 8300000 ரூபாவும் கடற்றொழில் அமைச்சுக்காக 700 கோடி ரூபாவும் சுற்றாடல் அமைச்சுக்காக 213 கோடி ரூபாவும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 871 கோடியே 3000000 ரூபாவும் நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சுக்காக 726 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்காக 7453 கோடியே 400000 ரூபாவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச்சேவைகள் அமைச்சுக்காக 707 கோடியே 5000000 ரூபாவும் தொழில் நுட்பம் மற்றும் முதலீட்டு அமைச்சுக்காக 542 கோடியே 6800000 ரூபாவும் முதலீட்டு மேம்பாடு அமைச்சுக்காக 339 கோடியே 7670000 ரூபாவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்காக 14073 கோடியே 3500000 ரூபாவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்காக 689 கோடியே 8000000 ரூபாவும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சுக்காக 1050 கோடி ரூபாவும் நீர்ப்பாசன அமைச்சுக்காக 8395 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.