கனடாவில் இளம் பெண்ணை கொலை செய்தவர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.
கனடாவின் Calgary நகரில் வசித்து வருபவர் Trisheena Simon (28). இளம் பெண்ணான இவர் சில தினங்களுக்கு முன்னர் அங்குள்ள ஒரு வங்கி வாசலில் படுகாயங்களுடன் கிடந்துள்ளார்.
இதை பார்த்த வங்கியின் காவலாளி Trisheenaவை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார்.
அங்கு இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த Trisheena சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், Trisheena சில வருடங்களாக Calgary நகரில் வசித்து வந்தாலும் அவர் நிலையாக எந்த வீட்டிலும் தங்கியதில்லை. அடிக்கடி வீட்டை மாற்றியுள்ளார்.
அவர் தலையில் பலத்த அடி ஏற்பட்டதால் இறந்துள்ளார். கொலை குறித்து சிலரிடம் விசாரித்துள்ளோம்.
விரைவில் கொலையாளிகளை பிடித்து விடுவோம் என அவர்கள் கூறியுள்ளனர்.