Loading...
இராணுவத்தின் 571 படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் காணியில் ஒரு ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நில அளவீடு இன்று புதன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த காணி விடுவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது என்றும் அதனை நேரில் சென்று தான் பார்வையிட்டு இன்றைய தினம் நில அளவீடு செய்யப்படும் என்று நேன்று செவ்வாய் கிழமை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்த நிலையில்
இன்றைய தினம் நில அளவீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் காணி கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்திடம் மாவட்ட செயலகம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் எனவும் பின்னர் கல்வித் திணைக்களம் பாடசாலை நிர்வாகத்தினம் கையளிக்கவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது
Loading...