டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள நியூ அசோக் நகரில் 35 வயதான திருமணமான பெண்ணுக்கு கடந்த 4 வருடங்களாக பலர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திருமணமாகி 20 ஆண்டுகளாகிய பெண்ணை 4 ஆண்டுகளாக மிரட்டி, தொடர்ந்து கற்பழித்தவர்களில் சிலரை தனக்கு தெரியும் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்செயலுக்கு தனது கணவனே துணைபுரிந்ததாகவும் கூறினார். கற்பழித்தவர்களிடம் இருந்த பணம் பெற்றுக் கொண்டு கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால் தன்னுடைய 4 வயது மகனை கொன்றுவிடுவதாக தனது கணவனே மிரட்டியதாகவும் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணின் புகாரை தொடர்ந்து, அவளது கணவனை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.