Loading...
அனுராதபுரம் தலாவ பகுதியில் எரிபொருள் ஏற்றிவந்த பௌசர் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 10 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.
Loading...
கொழும்பு சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த எரிபொருள் ஏற்றிவந்த பௌசர் ஒன்றே மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் குறித்த சிறுமியின் தாய்க்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமி இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...