Loading...
விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதன் நிறுவனமும் IM ஜப்பானும் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Loading...
செவிலியர் சேவைகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாயத் துறைகள் தொடர்பாக, இதன் கீழ், இந்த நாட்டின் இளைஞர்கள் 5 வருட சேவைக் காலத்திற்கு வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய மொழிப் புலமைப் பரீட்சை மற்றும் விசேட திறன் தொடர்பான பரீட்சையின் 4ஆம் நிலை சித்தியடைந்த இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
Loading...