Loading...
உலகெங்கும் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் இந்தியர்களுக்கு விசா கட்டுப்பாட்டில் சிறப்பு சலுகை வழங்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
Loading...
அமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவுகள் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் முஸ்லிம்களுக்கு விசா வழங்குவது தொடர்பான அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதோடு கோர்ட் தடை விதித்தது. இதை தொடர்ந்து விசா நடைமுறைகளை எளிமையாக்க டிரம்ப் முடிவு செய்தார்.
இந்நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு சாதகமான விசா நடைமுறையை அமல்படுத்த அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இது குறித்து பாராளுமன்றத்தில் தனது முதல் உரையில் டிரம்ப் பேசியதாவது, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளில் தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இது போன்ற குடியேற்ற முறை அதிகப்படியான டாலர்களை மிச்சப்படுத்துவதோடு பணியாளர்களின் ஊதியத்தையும் உயர்த்தும்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிண்கன் கூற்றினை பின்பற்ற வேண்டிய தருணம் இது. தற்போது இருக்கும் குடியேற்ற முறையினை தவிர்த்து புதிய தகுதி அடிப்படையிலான குடியேற்ற முறை அமெரிக்காவுக்கு நிறைய டாலர்களை மிச்சப்படுத்தி, பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தும். இது நம் நாட்டிற்கு குடியேறுவோரின் குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அமெரிக்காவில் மீண்டும் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்க இருக்கிறேன். நம் நாட்டு பணியாளர்களை பாதுகாக்க குடியேற்ற முறைகளை சட்டப்பூர்வமாக மாற்றியமைப்பது அவசியமானதாகும்.
எச்-1பி விசா மூலம் அமெரிக்காவில் குடியேறும் இந்திய ஐடி பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமானதாகும். இது தவிர இந்தியாவில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் என உயர் பதவி வகிக்கும் பணியாளர்கள் அதிகம் பேர் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர்.
இதனால் தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு முறை இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும். இதன் காரணமாக பல்வேறு இந்தியர்கள் அமெரிக்கா வருவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Loading...