அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா பதவி வகிக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்பப் பெறப்பட்டதால் அதை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி, உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
அதிமுக விதிகளின்படி.. அதிமுக விதிகளின்படி கட்சியின் பல்வேறு அணிகளில் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும். ஆனால், அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா கடந்த ஆண்டு டிச.29-ம் திகதி கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்த முடிவு கட்சி விதி 20-க்கு எதிரானது.
அதிமுகவின் பொதுச் செயலாள ராக தகுதியான நபரை தேர்வு செய்யும் விதமாக, உட்கட்சி தேர்தலை நடத்த தேர்தல் அதி காரியை நியமிக்க வேண்டும். அதுவரை அதிமுகவின் பொதுச் செயலாளராக செயல்பட சசிகலா வுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு மனு அனுப்பி னேன்.
இதுவரை எனது மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலிக்க தலைமை தேர்தல் ஆணையருக்கு உத்தர விடவேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ‘‘இது உட்கட்சி பிரச்சினை. இதை பொதுநல வழக்காக எப்படி தாக்கல் செய்ய முடியும். எனவே, மனுவை தள்ளுபடி செய்யப் போகிறோம்’’ என்றனர். இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.