நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட கினிகத்தேன பிரதேசத்தில் இளைஞன் மீது பெண் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
தனது மகளுடன் காதல் உறவில் ஈடுபட்ட 19 வயதுடைய மாணவனை மகளின் தாயார் கூரிய கத்தரிக்கோலால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் கினிகத்தேனை நகரில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக மாணவிக்கும் அவரது தாயாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலைலேயே தாயாரின் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தரிக்கோலால் குத்தப்பட்டதில் 13ம் வகுப்பு மாணவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாணவனை கத்தரிக்கோலால் குத்திய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.