இலங்கையில் போதுமான எரிபொருளை கையிருப்பில் சேமித்து வைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேல் – காஸா பகுதியில் நிலவி வரும் மோதல், உக்ரைன் – ரஷ்யா இடையிலான மோதல் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
போதியளவு எரிபொருள் இருப்பு
இதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அனைத்து களஞ்சியசாலைகளிலும் போதியளவு எரிபொருள் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் போர்கள் நீண்ட காலப் போராக மாறும் என்ற நம்பிக்கையில் மசகு எண்ணெய் உற்பத்தியாளர்களும் தங்கள் உற்பத்தி நடவடிக்கைகளைக் குறைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.