புதிய இணைப்பு
2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அனர்த்த நிலைமைகள் ஏற்படும் எந்த இடத்திலும் இருக்கும் சகல பரீட்சார்த்திகளும் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை, மாத்தறை மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் மாத்தறை மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் சில நாட்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.