மத்திய வங்கியில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் இருக்கின்றார்கள் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் புதிய இணையத்தளத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இரண்டாவது தடவையாகவும் சவால் விடுக்கின்றேன்.
இதற்கு முன்னர் விடுத்த சவாலை மஹிந்த ஏற்றுக்கொள்ளவில்லை. சந்திகளில், அரசியல் மேடைகளில் இது பற்றி பேசுவதில்லை பயனில்லை.
அப்போது மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார்கள்.
இந்த ஊழல் மோசடிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகள் இன்னமும் மத்திய வங்கியில் கடமையாற்றி வருகின்றார்கள். இதன் காரணமாகவே மோசடிகள் பற்றி அம்பலப்படுத்தியிருந்தோம்.
மீளவும் கூறுகின்றேன். குற்றச்சாட்டுக்கள் பொய் என்றால் அதனை நிரூபிக்குமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரியுள்ளார்.