Loading...
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் அணி தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னைய அணி தலைவர் தசுன் ஷனகா காயம் காரணமாக அணியில் இருந்து தற்காலிகமாக விலகியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று வரும் உலகக் கோப்பையின் எஞ்சிய போட்டிகளுக்கு இலங்கை அணியை அவரே வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...
மதீஷ பத்திரன காயம்
இதேவேளை ஷனகவுக்கு பதிலாக சகலதுறை வீரர் சாமிக்க கருணாரத்ன அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுமட்டுமன்றி வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன காயம் அடைந்துள்ளதால் இலங்கை அணி மற்றுமொரு பின்னடைவை எதிர்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...