Loading...
அனுராதபுரத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம் – கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று (16.10.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
பொலி்ஸ் விசாரணை
இதன் போது 25 வயதுடைய தாரகி குணரட்ன அமரசேன என்ற பெண்ணே அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Loading...
குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் உயிரிழந்த பெண்ணின் கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Loading...