சுவிட்சர்லாந்தில் மோசமான வானிலை காரணமாக 3500க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
Neuchâtel மாகாணத்தை பலத்த காற்று தாக்கியதில் சுமார் 3500க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெர்னீஸ் ஜூரா பகுதியையும் புயல் தாக்கியுள்ளதால் அப்பகுதிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்று காரணமாக மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்து பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
பெர்ன் மாகாண பொலிசார் கூறியதாவது, பலத்த காற்று காரணமாக மரங்கள் விழுந்ததாக பலர் தொலைபேசியில் அழைப்பு விடுத்தனர்.
பெர்னீஸ் ஜூரா பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமாக மெரரிங்கனில் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசியுள்ளதாக பதிவாகியுள்ளது. பல இடங்களில் பலத்த மழை பொழிந்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.