Loading...
இனப்படுகொலையை நிறுத்துமாறு இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இந்த இனப்படுகொலையை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சு வார்த்தைக்கு செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Loading...
இந்த யுத்தம் காரணமாக ஏராளமான தாய்மார்கள் பெண்கள் என பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் அழிக்கப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஆகவே பாலஸ்தீன அரசின் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற அதேநேரம் இஸ்ரேலும் பாலஸ்தீனும் நிம்மதியாக வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...