தேவையான பொருட்கள் :
கோவைக்காய் – கால் கப்
உளுந்தம் பருப்பு – ஐந்து டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்
பெருங்காயம் – இரண்டு சிட்டிகை
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 ஸ்பூன்
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
* கோவைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்த நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் கோவைக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* கடைசியாக உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும்.
* நன்றாக ஆறியதும், மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு போட்டுதாளித்து சட்னியில் சேர்க்கவும்.
* சூப்பரான கோவைக்காய் சட்னி ரெடி.
* இந்த சட்னி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த சட்னி.