30 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விகாரை ஒன்றுக்கு சொந்தமான 30 கோடி ரூபா பெறுமதியான இந்த வலம்புரி சங்கு மாலம்பே அரங்கலப் பிரதேசத்தில் வைத்து விற்பனை செய்வதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.
பௌத்த பிக்கு ஒருவரின் முயற்சி
பிரபல சிற்பக் கலைஞர் ஒருவர் இந்த வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கண்டியில் அமைந்துள்ள விஹாரையைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் சிற்பக் கலைஞரைக் கொண்டு வலம்புரிச் சங்கை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார் என விசாரணைகள் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
சிற்பக் கலைஞரை இடைத்தரகராக பயன்படுத்தி குறித்த பௌத்த பிக்கு இந்த வலம்பரி சங்கினை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.