பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவிடம் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
கோரிக்கை
பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் அமைச்சு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இருக்க வேண்டும் என அவர் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குழுக் கூட்டங்களில் பாதுகாப்புச் செயலாளர் அடிக்கடி கலந்து கொள்கிறார். இந்த குழுக் கூட்டங்களில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது பாதுகாப்புச் செயலாளர் தவறாக நடந்து கொள்வதாக நளின் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, பாதுகாப்பு செயலாளர் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பாதுகாப்பை வழங்குமாறு சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.