Loading...
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை 118 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் பேணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர இலக்கம்
Loading...
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தகவல் அளிப்பவரின் அடையாளத்தை அறிவிக்காமல் அந்த எண்ணின் மூலம் உரிய தகவல்களை வழங்கவும் முடியும்.
அந்த இலக்கத்தின் ஊடாக இலங்கையின் எந்த பகுதியில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் என்பதுடன் முகவர் அளிக்கும் தகவல்களின் இரகசியம் பாதுகாக்கப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Loading...