சா்ச்சகை்கு பெயா்போனவர் அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப், தோ்தலில் வேட்பாளராக போட்டியிடும் போதும் சரி, அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றபோதும் சரி, அதிரடிகளை அறிவித்து அனைவரது வயிற்றிலும் புளியைக் கரைப்பார்.
அமெரிக்கவாழ் வெளிநாட்டவா்களுக்கு விசாவில் கெடுபிடி, சில நாடுகளுக்கு முழு தடை, தடுப்புச்சுவா், அகதிகள் வெளியேற உத்தரவு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அமெரிக்கா்களை முகம் சுளிக்கவைத்தது.
சமீபத்தில் பல பத்திரிக்கைகளுக்கு நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தார். பல பத்திரிக்கைகள் தடைசெய்யப்படும் என்றும் கூறினார்.
பத்திரிக்கையாளா்கள் ஏற்பாடு செய்யும் விருந்தில் அமெரிக்க அதிபா்கள் கலந்து கொள்வது வழக்கம். அதனை தான் புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கிறாராம்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, டொனால்டு ட்ரம்ப் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் அனைவரும் வெள்ளை நிறத்தில் உடையணிந்து வந்திருந்தனர்.
இதற்கு நேரெதிராக ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் கறுப்பு நிறத்தில் உடையணிந்து வந்திருந்தார்.
மெலானியா ட்ரம்ப் அணிந்து வந்திருந்த அலங்கார உடையின் விலை சுமார் 10 ஆயிரம் டாலர் மதிப்பிலானது என சர்ச்சை எழுந்துள்ளது.
அவர் அணிந்து வந்திருந்த கறுப்பு நிற உடையின் விலை வரிகள் சேர்க்காமல் 9,590 டாலர்கள் என்றும், காலணி 600 டாலர் மதிப்பு கொண்டது எனவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபா் மற்றும் அமெரிக்க பத்திரிக்கைகள் இடையே பணிப்போர் துவங்கியுள்ளது.