வடக்கு மாகாண பாடசாலைகளில் 98 சதவீத வரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் (20.10.2023) தமிழ் கட்சிகளினால் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றையதினம் (19.09.2023) தமிழ் கட்சிகள் விடுத்த அறிக்கையில், பாடசாலைகளையும் புறக்கணியுங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் பாடசாலைகள் வழமை போல் இயங்குகின்ற நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.
98 வீதமான மாணவர்களின் வருகை
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் தவணை பரீட்சை இடம் பெறுவதன் காரணமாக வடக்கு மாகாண பாடசாலைகளில் 98 வீதமான மாணவர்களின் வருகை காணப்படுவதாக வட மாகாண கல்வித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருகை சில பாடசாலைகளில் குறைவடைந்துள்ள போதிலும் ஏனைய தீவக வலயம் உட்பட சகல பாடசாலைகளிலும் 98 வீதமான மாணவர்களின் வரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.