Loading...
தொடருந்துடன் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சீதுவை பிரதேசத்தில் நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.
தொடருந்து கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண்ணே தொடருந்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.
Loading...
பொலிஸார் விசாரணை
சீதுவை பிரதேசத்தின் லியனகேமுல்லை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய அந்தப் பெண், கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...