காசாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான எல்லைப் பகுதி இன்றைய தினம் திறக்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
காசா நேரப்படி இன்று முற்பகல் 10 மணியளவில் குறித்த எல்லை திறக்கப்படும் என தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த எல்லைப் பகுதி திறக்கப்படுமாயின் பலர் எல்லையை கடப்பார்கள் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
தூதரகம் விடுத்துள்ள அறிக்கை
இது காசாவில் உள்ள அமெரிக்க பிரஜைகள் வெளியேறுவதற்கு சாதகமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என அந்த தூதரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வெளிநாட்டு பிரஜைகள் குறித்த எல்லையை கடப்பதற்கு எவ்வளவு காலம் செல்லும் என்பது தொடர்பான தரவுகள் இதுவரையில் வெளியாகவில்லை.
மேலும், குறித்த எல்லை பகுதிக்கு செல்லும் மக்கள் தங்களது பாதுபாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.