Loading...
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஓய்வுபெற்ற கிராம அலுவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், அத்தனகல்லை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் விசாரணை
நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்கிரமபாகு அமலரட்ன (வயது 64) என்பவரே இவ்வாறு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
Loading...
துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காணிப் பிரச்சினை காரணமாக உயிரிழந்த நபருக்கும் பிரதேசத்தில் உள்ள ஒரு குடும்பத்தினருக்கும் இடையில் அண்மையில் கைலப்பு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Loading...