இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உள்ள தனது நிர்வாகியிடம் 250 ஆயிரம் டொலர்களை மோசடி செய்துள்ளார்.
35 வயதான நவிஷ்த டிசில்வா, என்ற இந்த இலங்கையர், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நிறுவனம் ஒன்றில் இருந்து, சிசிடிவி கருவிகளை வாங்குவதாகக் கூறி, தொடர்ச்சியான போலி கொள்முதல் உத்தரவுகள் மற்றும் விலைப்பட்டியல் மூலம் பணத்தை கையாடியுள்ளார்.
அதிகப் பணத்தைச் செலுத்தியுள்ளார்
அத்துடன், அவர் தனது தனிப்பட்ட நிறுவனமான குளோபல் டெலண்ட் என்டர்டெயின்மென்ட், தனது கிரிக்கெட் கழகமான எண்டெவர் ஹில்ஸ் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் நட்சத்திரப் பட்டியலைக் கொண்ட நிகழ்ச்சிகளுக்கு அதிகப் பணத்தைச் செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய நீதிமன்ற விசாரணையின் போது அவர், தமது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மார்ச் 2021 முதல் ஜூலை 2022 வரையிலான 16 மாதங்களிலேயே சில்வா, இந்த நிதி கையாடலில் ஈடுபட்டார் என்று தெரியவந்துள்ளது.
இந்த குற்றத்துக்காக அவருக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.