Loading...
அஜித்தின் ஒவ்வொரு பிறந்தநாளையும், அவருடைய படங்கள் வெளிவரும் நாளையும் அவரது ரசிகர்கள் ஒரு திருவிழா போலவே கொண்டாடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், கடந்த வருடம் அஜித்தின் மகன் ஆத்விக்கின் முதல் பிறந்தநாளையும் அஜித்தின் பிறந்தநாள் போலவே மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.
ஆத்விக்கின் புகைப்படங்களை வைத்து போஸ்டர்கள் அடித்து வீதியெங்கும் ஒட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல், இந்த வருடமும் குட்டி தலயின் பிறந்தநாளான இன்று (மார்ச் 2) அஜித் ரசிகர்கள் ஊர் முழுவதும் பேனர், போஸ்டர்கள் ஒட்டி கலக்கி வருகின்றனர்.
Loading...
அதேபோல், பல இடங்களில் அஜித் ரசிகர்கள் இரத்ததானம், அன்னதானம் என சிறப்பு நிகழ்கவுகளை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குட்டி தல-க்கு சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Loading...