நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இன்று பணிப்பபுறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
நேற்று கூடிய இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மத்திய நிறைவேற்று மற்றும் நிறைவேற்று சபையினால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது தொழிலை உகந்த மட்டத்தில் பேணுவதற்காக தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுமாறு அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக அறிவித்தும் உரிய பதில் வழங்காத காரணத்தினால் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இன்று பணியிலிருந்து விலகும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் திரு.ஷானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச துறையின் நிறைவேற்று அதிகாரி சேவை பிரிவைச் சேர்ந்த பொறியியலாளர்கள், வைத்தியர்கள், கால்நடை வைத்தியர்கள், நிபுணர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளன.
தொழிற்சங்கங்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்கத் தவறியதன் காரணமாகவே இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.