சீனாவில் உள்ள மிருக காட்சிசாலைகளுக்கு 100,000 குரங்குகளை அனுப்பும் ஆரம்ப வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,சுற்றாடல் அமைப்புகளினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளினால் குரங்குகளை ஏற்றுமதி செய்யும் ஆரம்ப வேலைத்திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
உணவு நெருக்கடி
இதேவேளை எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதால், வன விலங்குகளால் பயிர்ச்செய்கை பயிர்கள் நாசமாக்கப்படுவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுப்பதற்காக இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் நடைமுறையில் இல்லை.
சுற்றுச் சூழல் அமைப்புகளின் ஆலோசனைகள் பயிர்களை சுற்றி புடவைகளை தொங்கவிடுவது, தென்னை மரங்களில் தட்டுகள் கட்டுவது போன்ற யோசனைகள் என்றும், அரை ஏக்கர் பயிர்ச்செய்கையை வன விலங்குகளுக்காக ஒதுக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.