ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரப் போவதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜெனீவா அமர்வில் கலந்துகொள்ளச் சென்றுள்ள சிறீலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலர் மனோ தித்தவெல பிபிசியிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற முடியும் என்று சிறீலங்கா நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்காவுக்கு காலஅவகாசம் அளிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், புதிய தீர்மானம் ஒன்று அமெரிக்கா, பிரித்தானியா, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் இணை அனுசரணையுடன் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.