கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி வரை மற்றும் விடுமுறை நாட்களில் தனியார் கல்வி நிலைய வகுப்புகள் நடத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலதிக வகுப்புகள்
மேலதிக வகுப்புகள் காரணமாக பிள்ளைகளுக்கு தம்ம கல்வி கற்பதற்கு நேரமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, திருகோணமலை வடக்கு, கந்தளாய், அம்பாறை, மஹாஓயா, தெஹியத்தகண்டி ஆகிய கல்வி வலயங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.