பிரபல இந்தி நடிகை அலியா பட் தந்தையிடம் மும்பை தாதா பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் அலியா பட். இவர் பிரபல இந்தி திரைப்படத் தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகள் ஆவார்.
மகேஷ்க்கு தொலைபேசி மூலம் நேற்று ஒரு மிரட்டல் வந்தது.
அதில் மும்பை நிழல் உலகை சேர்ந்த தாதா என்ற பெயரில் பேசிய நபர், 50 லட்சம் ரூபாய் பணம் தரத் தவறினால் அலியா பட்டையும், அவரது தாயாரையும் கொலை செய்யப்போவதாக கூறியுள்ளான்.
பின்னர் இதே மிரட்டல் எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் மூலமும் இவருக்கு வந்துள்ளது.
இதையடுத்து மகேஷ்பட் இது குறித்து பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். தனிப்பிரிவு பொலிசார் தற்போது இதை விசாரித்து வருகின்றனர்.
கடந்த 2014ல் பிரபல தாதா தாவூத் இப்ராமின் ஆட்கள் மகேஷ் பட் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது