தமிழக அரசியல்வாதிகள் கடந்த சில நாட்களாக பிரதமர், ஜனாதிபதி ஆகியோர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த வகையில் ஓபிஎஸ் அணியினர், எடப்பாடி பழனிச்சாமி அணியினர்களை தொடர்ந்து தற்போது தீபாவும் பிரதமரை விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை மேற்கொள்ள அவர் வலியுறுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஓபிஎஸ் அணியினர் ஜனாதிபதியையும், எடப்பாடி பழனிச்சாமி பிரதமரையும் சந்தித்தனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் மு.கஸ்டாலினும் சமீபத்தில் ஜனாதிபதியை சந்தித்து சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விளக்கினார்.
இந்த நிலையில் சமீபத்தில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் டெல்லி சென்று பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இருவரிடமும் கோரிக்கை விடுத்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.