வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி என்ற ரீதியில் தீர்மானிக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா, வரவு – செலவுத் திட்டம் தொடர்பான எமது கருத்துக்களை முன்வைப்பதா என்பதை நாம் கட்சி என்ற ரீதியில் தீர்மானிப்போம்.
கட்சி முடிவுகளை எடுத்தால் நாம் அறிவிப்போம். அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கட்சியின் செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்று மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்கும் திட்டத்தை பேசிய கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பினர்கள்.
மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பினார்கள். மின்கட்டணத்தை உயர்த்திதான், மின்சார சபையை லாபத்தில் இயங்க வைக்க வேண்டுமெனில், மின்சக்தி அமைச்சொன்றோ மின்சார சபையோ தேவையில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.