இஸ்ரேலில், ஹமாஸ் நடத்தியது போன்ற திடீர் தாக்குதல்களைத் தடுக்க இந்தியா தனது எல்லைகளில் ஆளில்லா விமானங்களைக் கொண்ட கண்காணிப்பு அமைப்பை நிறுவுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒருக்கட்டமாக, நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த வாரத்தில் கண்காணிப்பு மற்றும் உளவு ட்ரோன்களின் உள்நாட்டு விற்பனையாளர்களை சந்தித்தனர் எனவும், இந்தநிலையில் அடுத்த மே மாதத்தில் எல்லையின் சில பகுதிகளில் இந்த அமைப்பு நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் குறிப்பாக இமயமலையில் பதற்றம் நீடிப்பதால் எல்லைகளை எப்போதும் கண்காணிப்பது இந்தியாவுக்கு அவசியமாகியுள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் ட்ரோன்
முன்னதாக உக்ரைனில் நடந்த போர், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தை அதன் ஆயுதக் களஞ்சியம், போருக்கான ஆயத்தம் போன்றவற்றை மீளபரிசீலனை செய்ய வைத்துள்ளது.
இதனையடுத்து ஹமாஸ் தாக்குதல் பரிந்துரைக்கப்பட்ட சில நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்த மோடி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்துள்ளது இந்தியா.
கடந்த காலங்களில் திடீர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் இருந்து தாக்குதல்தாரிகள், ஆயுதங்கள் மற்றும் கையெறி குண்டுகளுடன், கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவி, நகரின் முக்கிய அடையாளங்களை மூன்று நாட்கள் முற்றுகையிட்டு, 166 பேரைக் கொன்றனர்.
இதேவேளை புதிதாக கூறப்படுகின்ற ஆளில்லா ட்ரோன் அமைப்பு முழு எல்லைகளையும் உள்ளடக்குவதற்கு கிட்டத்தட்ட 18 மாதங்கள் ஆகலாம், அத்துடன் ஆண்டுக்கு 500 மில்லியன் டொலர்கள் செலவாகும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக சூரிய சக்தியில் இயங்கும் ட்ரோன்கள், தரையிறங்காமல் நீண்ட நேரம் இயங்கக்கூடிய உயர் ரகசெயற்கைக்கோள்கள், இந்த அமைப்பிற்கு பயன்படுத்தப்படும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்
24 மணித்தியாலங்களும் உயரத்தில் இருக்கும் நீண்ட பொறுமை கொண்ட ட்ரோன்கள், எல்லைகளில் உள்ள பாரம்பரிய ரேடார் வலையமைப்புக்கு துணையாகவும், உள்ளூர் கட்டளை மையங்களுக்கு படங்களை நேரடியாகவும் ஒளிரச் செய்யும் என்று வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்துக்கான கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை.
இதற்கிடையில் இந்தியாவின் நில எல்லைகள் மற்றும் கடற்கரைகளின் 14,000 மைல்கள், அதாவது 22,531 கிலோமீட்டர் பகுதி, ட்ரோன் அமைப்பு செயற்;பட்டவுடன் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கும் என்று இந்திய படைத்தரப்பு தெரிவித்துள்ளது.