இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவிப்போம், அதற்கான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறோம் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டதுர்க் விமான நிலையத்தில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் கூடி பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த பிரம்மாண்ட பேரணிக்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தலைமை தாங்கினார்.
பிரம்மாண்ட பேரணி
இதன்போது உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவிப்போம், அதற்கான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.
நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்? நீங்கள் ஒரு ஆக்கிரமிப்பாளர்கள், மேற்கத்திய நாடுகள் உங்களுக்கு கடன்பட்டு இருக்கலாம், ஆனால் துருக்கி உங்களுக்கு கடன் பட்டிருக்கவில்லை.
மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இல்லை என்று துருக்கி சொன்ன போது இஸ்ரேலுக்கு அது பிடிக்கவில்லை.
மேற்கத்திய நாடுகளே, உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்! சிலுவைக்கும், பிறை நிலாவுக்கு இந்த சண்டை வேண்டுமா என்று? லிபியாவில், கராபாக்கில் எப்படி இருந்தோமோ அப்படியே மத்திய கிழக்கிலும் நாங்கள் இருப்போம் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
ஆதரவு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் பாலஸ்தீனத்திற்கு ஈரான், லெபனான், சிரியா, சவுதி, துருக்கி, ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.