Loading...
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நாளை மீண்டும் கூடவுள்ளது.
காஸா பகுதியில் தரைவழித் தாக்குதல்களை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பாதுகாப்புச் சபை கூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, காசா பகுதியிலிருந்து உடைந்த தொலைபேசிகள், இணையம் மற்றும் பிற தகவல் தொடர்பு வசதிகள் மீளமைக்கப்பட்டுள்ளன.
Loading...
கடந்த வெள்ளிக்கிழமை முதல் தகவல் தொடர்பு அமைப்பில் சிக்கல் ஏற்பட்டது.
எவ்வாறாயினும், காஸா பகுதியின் பல பகுதிகளில் தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகள் மீளமைக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...