அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் அடுத்த கொடுப்பனவு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக 8.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த நிதியாண்டில் 1.36 மில்லியன் பயனாளி குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், செப்டெம்பர் மாதத்திற்கான உதவித்தொகையானது நவம்பர் மாதத்தில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் எதிர்வரும் முதலாம் திகதி பயனாளிகளின் கணக்கில் வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த நலத் திட்டத்திற்கு தெரிவு செய்யப்படாத விண்ணப்பதாரர்களின் பரிசீலனை நவம்பர் 06 முதல் 12 வரை இடம்பெறும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.