பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி நபர்களை அச்சுறுத்தி மோசடியான முறையில் பணத்தை பெற்றுக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கம்பஹா பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா பிரதேசத்தில் உள்ள விடுதிகளுக்கு செல்லும் நபர்களை பயமுறுத்தி இந்த நபர் பணம் பறித்து வந்துள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், மற்றுமொரு நபரிடம் இரண்டு லட்சம் ரூபாவை பலவந்தமாக பெற்றுக்கொள்ள முயற்சித்த சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மேலும் சிலருடன் இணைந்து திட்டமிட்டு இந்த குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 42 வயதான கிரிபத்கொடை, ஹெய்யன்துடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, ஏனைய நபர்களை கைது செய்வதற்காக கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.