முல்லைத்தீவு 35 பிரதான வீதியில் மர்மமான தீ தணல்கள் கொட்டிய நிலையில் சுமர் அரை மணிநேரம் அவை நடுவீதியில் எரிந்து புகைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த எரிதனல் வட்டுவாகல் பாலத்திலும், மணற்குடியிருப்பு பாலத்திற்கும் அருகிலும் நடு வீதியில் புகைத்துக் கொண்டிருந்துள்ளதாக கூறப்படுகின்றது .
இந்த நிலையில், போக்குவரத்து சாரதிகள் குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் அச்சத்துடன் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வட்டுவாகல் பாலத்தில் எரிந்து கொண்டிருந்த எரிதனல் நீண்ட நேரம் கற்புரம் எரிவது போன்று எரிந்து கொண்டிருந்தது.
இதன் காரணமாக, அருகில் காவலரனில் இருந்த இராணுவத்தினர் சற்று பரபரப்புடன் காணப்பட்டதாகவும், குறித்த தனல் என்னவென்பது தொடர்பில் அவர்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
எனினும், குறித்த எரிதனல் என்ன..? அது எங்கிருந்து விழ்ந்தது என்பது தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.