வளான ஊழல் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரின் பெயரைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பத்திரிகைகளில் திருமண விளம்பரம் வெளியிடும் பெண்களை குறி வைத்து மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறித்த நபர் மீது குற்றச்சாட்டுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பத்திரிகைகளில் வெளியாகும் பெண்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்று குறித்த பெண்களின் விபரங்களை குடியிருப்பாளர்களிடம் பெற்றுக் கொண்டுள்ளார்.
திருமண விளம்பரம்
பின்னர் அவர்கள் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மிரட்டி பணத்தை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு துணையாக இருந்து இந்த மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மேலும் 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.